‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ்! வாழ்த்திய பிரபலங்கள், குவியும் பாராட்டுக்கள்

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

குறிப்பாக சென்னையில் அதிகாலை நான்கு மணி காட்சியில் திரையுலக பிரபலங்கள் குவிந்தனர்.

‘நேர் கொண்ட’ பார்வை’ படத்தின் நாயகி ஷராதா ஸ்ரீநாத், யுவன் சங்கர் ராஜா மற்றும் ரங்கராஜ் பாண்டே உள்பட படக்குழுவினர் பலரும் இன்று சென்னையில் ரோகிணி திரையரங்கில் அதிகாலை 4 மணிக்கு காட்சியை ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து இந்த படத்தை பார்த்து ரசித்தனர்.

இந்த படத்தை பார்த்து ஏற்கனவே பத்திரிகையாளர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்துள்ள நிலையில் இன்றைய முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் அளித்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என தெரிகிறது.

இதுவரை ஒருவர் கூட படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் அளித்ததாக தெரியவில்லை. பெரும்பாலான ரசிகர்கள் இந்த படத்தை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.

ஒரு பெண்ணை தவறாக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் ஒரு பாடம் என்றும், பெண்களை மதிக்கும் ஒவ்வொரு ஆணும் அவசியம் பார்க்க வேண்டிய படம் என்றும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ‘பிங்க்’ படத்தை விட இந்த படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அமிதாப்பை விட அஜித் சிறப்பாக நடிக்க உள்ளதாகவும் பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனதை அடுத்து கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக விஜய் நடித்து வரும் ‘பிகில்’ பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித், போனிகபூர் உள்பட படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது விஸ்வாசம் படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor