ஆனந்தக்கண்ணீர்: அன்று அருண்விஜய், இன்று ஷராதா ஸ்ரீநாத்!

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் இன்று முதல் நாள் முதல் காட்சியை இந்த படத்தின் நாயகி ஷராதா ஸ்ரீநாத், சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார்

படம் முடிந்து அவர் வெளியே வரும்போது அவருடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அஜித் ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்த அவர் ‘இது தனக்கு ஒரு ஸ்பெஷல் அனுபவம் என்றும், தமிழில் முதல் படமே தனக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும், இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக பணிபுரிந்தது பெருமைக்குரியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் கடந்த 2015ஆம் ஆண்டு ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளியான போது அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்த அருண்விஜய், அஜித் ரசிகர்களின் அன்பு மழையால் நனைந்து எதுவுமே பேச முடியாமல் ஆனந்த கண்ணீரால் திக்குமுக்காடி போனார் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor