என்னாது இந்த டீமா? நம்பர் 1 இடத்துக்கு போட்டி போடும் அந்த அணி!

2020ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டு என பலரும் கூறி வருகின்றனர். இந்த ஆண்டில் தான் பல மோசமான சம்பவங்கள் நடந்து வருகின்றன என பட்டியலை நீட்டுகிறார்கள்.

ஐபிஎல் தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஒரு சீசனில் கூட பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் இருந்ததில்லை.

ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால், தற்போது யாரும் எதிர்பார்க்காத ஐபிஎல் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

அந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். அந்த அணி கடந்த இரு சீசன்களில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. புள்ளிப் பட்டியலில் கூட கடைசி இரண்டு இடங்களை மட்டுமே அந்த அணியால் பெற முடிந்தது. ஆனால், இந்த சீசனில் எல்லாமே மாறி உள்ளது.

பெங்களூர் அணி கொல்கத்தா அணியை 84 ரன்களுக்குள் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியுடன் பெங்களூர் அணி லீக் சுற்றில் 10 போட்டிகளில் பங்கேற்று 3 தோல்விகள், 7 வெற்றிகள் பெற்றுள்ளது.

டெல்லி அணியும் 10 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்றுள்ளது. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. மும்பை அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

பெங்களூர் அணி தொடர்ச்சியாக அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற வாய்ப்புள்ளது. . பெங்களூர் அணி எப்போதும் போல தோல்வி அடையும் என எதிர்பார்த்த மற்ற அணிகளின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பெங்களூர் அணி கொல்கத்தா போட்டிக்கு முன்பு வரை மூன்றாம் இடத்தில் இருந்தது. அந்த அணி எப்படியும் பிளே-ஆஃப் செல்லும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், முதல் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் தான் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது பெங்களூர் அணி மற்ற அணிகளை மிரள வைத்துள்ளது. கொல்கத்தா அணியை 84 ரன்களுக்கு சுருட்டி ஆதிக்கம் செலுத்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இதை அடுத்து பெங்களூர் அணி குறித்து மற்ற அணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor