அர்ச்சனா போட்டியாளரா.. பிக்பாஸா.. கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்!

கடந்த சீசன் முதலே பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருபவர் நடிகர் சிவகுமார்.

கடந்த சீசனல் இவர் கணித்ததை போன்றே முகேன் டைட்டில் வின்னரானார். இந்நிலையில் இந்த சீசனையும் தொடர்ந்து ஃபாலோ பண்ணி வரும் சிவகுமார் தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

ஏன் மன்னிப்பு கேட்கவில்லை

அந்த வகையில் கடந்த வாரம், விஜே அர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்தியை மொட்டை என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார் சிவகுமார். சுரேஷ் சக்கரவர்த்தி ஒன்றும் சாதாரண ஆள் இல்லை என்று அவர் குறித்த பல முக்கிய தகவல்களை கூறினார்.
போட்டியாளரா? பிக்பாஸா?
மேலும் அர்ச்சனா தன்னுடைய பழைய நாட்களை மறந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில், சனம் ஷெட்டி சுரேஷ் சக்ரவர்த்தியை மரியாதை குறைவாகவும் தரக்குறைவாகவும் பேசியதை பார்த்து கடுப்பாகியுள்ளார் சிவகுமார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நான் இறுதியாக சனத்தை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் !! இந்த சாதாரண விஷயத்தால் அவர் கண்ணை இழந்திருக்கலாம்!

சுரேஷ் சார் மன்னிப்புக் கேட்டபின், அவரை மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசியதற்கு சனம் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது. அவர் பேசிய வார்த்தைகளை கூட அவர் உணரவில்லை என பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய மற்றொரு பதிவில் விளையாட்டு வினை ஆகும்.. என்னை மக்கள் ஒருசார்பாக இருப்பதாக கூறுவதை பற்றி நான் பொருட்படுத்தவில்லை! நான் அப்படி இல்லை!

சுரேஷ் சார் அனைவரையும் அடித்தது தவறு! ஆனால் பெரியவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், அவர் ஒரு பெரிய தவறு செய்ததாக உண்மையிலேயே உணர்ந்தார்! ஆனால் எனக்கு புரியவில்லை அர்ச்சனா போட்டியாளரா அல்லது பிக்பாஸா என பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor