ஆவேசமான அறந்தாங்கி நிஷா.. அனல் பறக்கும் பட்டிமன்றம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கும் பட்டி மன்றம் நடப்பது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாய் நாடா இல்ல காடா டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரளயமே வெடித்தது. விளையாட்டு வினையான கணக்காய் சனம் ஷெட்டியிடம் சிக்கி சின்னாப்பின்னமானார் சுரேஷ் சக்கரவர்த்தி.

போடா வாடா என்றும் யோவ் நீ போ வா என்றும் படு மோசமாக சுரேஷ் சக்கரவர்த்தியின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் திட்டி தீர்த்தார்.

சனம் ஷெட்டி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். சனம் போட்ட போட்டில் நான் வீட்டுக்கே போகிறேன் என கதறிவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் பட்டிமன்றம் நடப்பது தெரியவந்துள்ளது. பட்டிமன்றத்தின் டைட்டிலை படிக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

அதன்படி பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம், பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடக்கிறது.

 

இதில் முதலாவதாக பேசும் வேல்முருகன், இந்த குடும்பம் இருந்தால்தான் விளையாட்டு, விளையாட்டு இருந்தால் தான் ஜெயிப்போம் என கூறுகிறார்.

அவரை தொடர்ந்து பேசும் அனிதா. அன்பு, எல்லாரும் ஒரு தாய் பிள்ளைகள் என பேசுனீங்கள்ல அன்னைக்கு எல்லாரும் குத்தும்போது ஏன் அழுதீங்க என்று கேட்கிறார்.

தொடர்ந்து பேசும் ரியோ, எல்லாரும் நம்முடைய தேவைக்காகதான் இந்த போட்டிக்களத்துக்கு வந்தோம் என்கிறார். அடுத்ததாக பேசும் அறந்தாங்கி நிஷா, புர்ஃபெக்ட் பட்டி மன்ற பேச்சாளர் போன்றே புறணி பேசுவது அழகுங்க என்ற டோனுடன் ஆரம்பிக்கிறார்.


Recommended For You

About the Author: Editor