மீரா விவகாரம்: சேரனை கேலி செய்யும் கஸ்தூரி!

பிக்பாஸ் வீட்டில் சேரன் மீது மீராமீதுன் சுமத்திய குற்றச்சாட்டால் சேரன் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ந்தது.

சேரன் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்து வரும் நிலையில் திடீரென மீரா இல்லாத ஒன்றைக் கூறி சேரன் மீது குற்றம் சுமத்தியதை அடுத்து அவருக்கு உடனடி தண்டனையாக அவர் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சேரன் குற்றமற்றவர் என்றும் குறும்படம் மூலம் நிரூபிக்கப்பட்டது

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள நடிகை கஸ்தூரி, சேரனிடம் மீரா விவகாரம் குறித்து கேட்கின்றார். மீரா விவகாரத்திற்கு பின்னர் கையை ரோபோ மாதிரி நேராக வைத்துள்ளீர்களே என்றும் கஸ்தூரி கேலி செய்தார்.

அதனைக் கேட்டு சேரன் சிரித்தவாறு இருந்தார்

அதன் பின்னர் தர்ஷனிடமும், ஷெரினிடமும் நீங்கள் எதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீர்கள் என்று கஸ்தூரி கேள்வி கேட்டபோது ‘நான் தர்ஷனை பார்ப்பதற்காகவே வந்தேன் என்று ஷெரின் கூற அதற்கு தர்ஷன் வெட்கமடைகிறார்.

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே முகின் – அபிராமி, கவின் – சாக்சி ஆகிய காதல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிதாக தர்ஷன் – ஷெரின் காதலும் இணைந்து கொண்டது போல் தெரிகிறது

மொத்தத்தில் கஸ்தூரியின் வருகைக்குப்பின் பிக்பாஸ் வீடு ஜாலியாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை என தெரிகிறது. இதே நிலை நீடித்தால் இந்த நிகழ்ச்சி சுவராசியமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது


Recommended For You

About the Author: Editor