பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த கஸ்தூரி: கலக்கத்தில் கவின், சாக்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்த நடிகை கஸ்தூரி இன்று திடீரென பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக நுழைந்துள்ளார்.

கஸ்தூரியை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து அவரை இன்முகத்துடன் வரவேற்று உள்ளனர்.

கஸ்தூரியின் வரவு பிக்பாஸ் வீட்டில் ஒரு திடீர் திருப்பத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை தனது சமூக வலைதளங்களில் எழுப்பிய கஸ்தூரி, அந்த கேள்விகளை போட்டியாளர்களிடம் நேரில் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை உறுதி செய்யும் வகையிலும் சாக்சியிடம் தான் அதிக கேள்விகள் கேட்க வேண்டும் என கஸ்தூரி கூறியது சாக்சியை கலக்கத்திற்கு உண்டாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி கவின் குறித்தும் கஸ்தூரி அதிக விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனத்தையும் அவர் பிக்பாஸ் வீட்டில் கவின் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரியை சிறப்பு விருந்தினராக வந்துள்ளாரா? அல்லது போட்டியாளர்களில் ஒருவராக வந்து உள்ளரா? என்பது குறித்து தெரியவில்லை என்றாலும் அவர் இருக்கும் ஒரு சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக போரடிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த நிலையில் கஸ்தூரி இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Recommended For You

About the Author: Editor