நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 3ம் நாள் உற்சவம்!!📷

“முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதிதீரா”
மூன்று புரங்களையும் தழலெழ நகைத்து எரித்தருளிய அந்த (அளக்கரிய புகழையுடைய) சிவபெருமான் ஊர்ந்த இரதத்தினுடைய, அச்சை தன்னை நினையாத காரணத்தினால் முறித்துப் பொடியாக்கிய மிகுந்த 
தீரத்தன்மையுடையவராகிய ஆனைமுகனின் தம்பி நல்லூர்க் கந்தவேற்ப் பெருமான் மயூர வாகனாக வெள்ளி மயில் மீதினும் வள்ளி தேவசேனாதிபதி வெள்ளி அன்ன வாகனத்திலும் வலம் வரும் மூன்றாம் நாள் உற்சவ காட்சிகள் மிக அற்புதமானவை.

Recommended For You

About the Author: Editor