அமெரிக்க – சீன வர்த்தகப் போர் வலுவடையும் அபாயம்!

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் வலுவடையக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைகளுக்கு மத்தியில் Rare Earths எனப்படும் அரியவகை உலோகங்களைச் சீனா தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தக்கூடுமென சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளாவிய அரியவகை உலோகங்களின் விநியோகத்தில் சீனா 95 சதவீதத்தை கொண்டிருக்கிறது.

அமெரிக்காவால், 2014 முதல் 2017 வரை இறக்குமதி செய்த அரியவகை உலோகங்களில் 80 சதவீதமானவை சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான, 17 வகையான அரியவகை உலோகங்கள், மின்னணுச் சாதனங்களிலிருந்து இராணுவக் கருவிகள் வரை பலவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவிற்கு அவற்றை விநியோகிக்க சீனா மறுத்தால், Apple உள்ளிட்ட அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, அரியவகை உலோகங்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தப் போவதாகச் சீனா வெளிப்படையாக இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor