தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வடகிழக்கு தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

6.0 ரிக்டர் அளவில் இன்று(வியாழக்கிழமை)) காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் இலன் நகரிலிருந்து தென்கிழக்கில் 36 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையங்கொண்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.


Recommended For You

About the Author: Editor