புத்தளத்தில் மினி சூறாவளி

புத்தளத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ரத்மல்யாய பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் இவ்வாறு மினி சூறாவளி வீசியுள்ளது.

இதன் காரணமாக சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகளும் 7 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சேத விபரங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அந்நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மினி சூறாவளி காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பாரிய மரம் ஒன்று பாதையில் விழுந்தமையால் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியிலான போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தியதன் பின்னர், போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்