உலகக்கோப்பை: முதல் பந்திலேயே இங்கிலாந்து வீரரை டக்-அவுட்டாக்கிய தாஹிர்!

உலகக்கோப்பை தொடரின் முதல் ஓவரிலேயே தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ்வின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தின் லண்டன் ஓவர் மைதானத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை முதல் போட்டி நடைபெற்று வருகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ்-ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Embedded video

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் முதல் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். முதல் பந்தில் இங்கிலாந்துக்கு ஒரு ரன் கிடைக்க, இரண்டாவது பந்தில் பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தான் சந்தித்த முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு பேரிடியாக விழுந்துள்ளது.


Recommended For You

About the Author: Editor