கொழும்பு – கண்டி வீதியில் விபத்து மூவர் உயிரிழப்பு.

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவப் பகுதியிலேயே இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும் கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வானின் சாரதி உட்பட 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வானின் சாரதியும் இரண்டு பெண்களும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வானின் சாரதி, அவரது தாயார் (47-வயது) மற்றும் 52 வயதுடைய பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வானின் சாரதியின் தந்தை மற்றும் சகோதரி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்