கடலில் தோன்றிய அதிசய நீர்ச்சுழல்!

ரஷ்யாவின் கடற்பகுதியில் தோன்றிய நீர்ச்சுழல், கடல்நீரை உறிஞ்சி இழுக்கும் காட்சிகள் வலைதளங்களில் பரவி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்நாட்டின் சொச்சி நகரில் உள்ள நிஸ்நியாயா பெரண்டா என்ற இடத்துக்கு சுற்றுலா சென்ற பெண் சுற்றுலா பயணி ஒருவர், கடற்கரையோரம் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது இந்த காட்சியை வீடியோ பதிவு செய்தார்.

கடற்கரையின் மேல் கருமேகங்கள் சூழ்ந்திருக்க, மேகத்திலிருந்து கீழிறங்கிய நீர்ச்சுழல் கடல்நீரை உறிஞ்சி, கரை நோக்கி மெல்ல நகர்ந்தன.

ஓட்டலிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இந்த நீர்ச்சுழல் சுழன்று வந்ததை கண்டு அச்சமடைந்ததாக தெரிவித்த அவர், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறினார்.


Recommended For You

About the Author: Editor