HNDA மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதுடன், கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

அரச பணி வழங்குவதில் தாம் புறக்கணிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்