நல்லூர் கந்தன் வெளிவீதிஉலா இடைநிறுத்தப்பட்டுள்ளது

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் திருவிழாவில்  சுவாமி வெளிவீதிவலம் வரும் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணத்துக்காக இந்த வெளி வீதிவலம் வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

இன்று காலை கந்தப் பெருமானுக்கு 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேக உற்சவத்தினைத் தொடர்ந்து ஆலய வசந்த மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்றுவருகின்றது.

இதனைத் தொடர்ந்து அலங்காரக் கந்தன் திருமணக் கோலத்தில் எழுந்தருளி வெளி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

இந்நிலையில், குறித்த வெளி வீதி வலம்வரும் நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor