நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்பாட்டால் தி.மு.க தனிமைப்படுத்தப்படும்.

நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்டால் தி.மு.க. தனிமைப்படுத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய போதே தமிழிசை சவுந்தரராஜன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு தடை விதித்ததன் மூலம் தமிழகத்தை மத்திய பாஜக அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிர்கட்சிகளின் பிரச்சாரம் தோல்வியடைந்துவிட்டது.

மேலும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக தி.மு.க. செயற்பட்டால் அக்கட்சியை எதிர்க்கட்சிகள் கூட ஆதரிக்காது” என தமிழிசை தெரிவித்தார்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுமானால் தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் என்ற வாதத்தை சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 24 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணைகட்ட முயற்சி செய்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல் என குறிப்பிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்