பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு மாற்றங்கள்.

பயங்கரவாதம் மற்றும் அரச புலனாய்வு உள்ளிட்ட துறைசார் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்கழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் பாதுகாப்புப் பிராந்தியத்திற்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் எ.ஜே. கரவிட்ட, பிரதமர் பாதுகாப்புப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவின் உதவிப் பணிப்பாளராக செயற்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.எல்.சி. சம்பத் குமார, அரச புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சேர்ப்பு , பயிற்சி , மனித வள முகாமைத்தும் மற்றும் சர்வதேச தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரியாக பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். தர்மரட்ண இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பொறுப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.டப்ளியூ,எம். சேனாரட்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் நுகேகொட பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி. கருணாநாயக்க மொனராகலை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸ் பிரிவின் பொறுப்பாளராக இருந்த பிரதி பொலிஸ்மாதிபர் எம்.என். சிசிர குமார மனதவள முகாமைத்துவ பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் சி.கே.அலாகோன் நுவரெலியா பொலிஸ் பிரிவின் பொறுப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்