
பள்ளிவாசலில் இருந்து கைப்பற்றப்பட்ட கோடரி மற்றும் கத்தி முதலானவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்குவதற்கு தயாரான வெலம்பட பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மூத்த பொலிஸ் அதிகாரியின் அனுமதி இன்றி அவற்றை மீண்டும் வழங்குவதற்கு இவர் நடவடிக்கை மேற்கொண்டமையினாலேயே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட 76 கத்திகள் 13 கைக் கோடரிகள் ஆகியவற்றை மீண்டும் வழங்குவதற்கு பொலிஸ் புத்தகத்தில் கையெழுத்து இட இவர் தயாராகியுள்ளார்.
கண்டி எசல பெரஹரா கடமைகளுக்காக ஒன்றிணைக்கப்பட்டுள்ள வெலம்பட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான ஷாந்தபண்டாரவிற்கு இந்த விடயம் தெரியவந்ததை அடுத்து அவர் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார் என்று பொலிஸ் பேச்சாளர், பொலிஸ் அத்தியகட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.v