கம்போடியாவில் மைத்திரி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் பயணமாக கம்போடியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதற்கமைய அவர் இன்று (புதன்கிழமை) நொம்பென்னை வந்தடைவார் என கம்போடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கம்போடிய மன்னர் நொரொடோம் சிகாமணியின் அழைப்பின் பேரில் நொம்பென்னுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு மன்னரின் அரச மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் கம்போடிய பிரதமர் ஹூன் சென்னுடன் இருதரப்பு பேச்சுக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் இந்த பயணத்தின்போது, அவர், அங்கோர் புராதன பூங்காவில் உள்ள பௌத்த ஆலயங்களுக்கும் செல்லவுள்ளனர்.

இதெவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்கும் பதாதைகள் நொம்பென்னில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்