மணல் ஏற்றியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தி, கண்மூடித்தனமான தாக்குதல்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்- அம்பகாமம் பகுதியில் டிப்பா் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவா்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளதுடன், டிப்பா் வாகனத்தின் சாரதியை கைது செய்து மூா்க்கத்தனமாக தாக் கிய நிலையில் குறித்த பகுதியில் நேற்று இரவு கடுமையான பதற்றம் உருவானது.

குறித்த பகுதியில் மணல் ஏற்றியவர்கள் மீது அங்கு சென்ற 4 இராணுவத்தினர் தாக்க முற்பட்ட வேளையில் அங்கு மணல் ஏற்றிய மூன்று பேர் தப்பியோட முயற்சித்துள்ளனர் இந்நிலையில் வாகன சாரதியை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். தெய்வாதீனமாக துப்பாக்கி ரவைகள் அவர்மீது படவில்லை

ஏனையவர்கள் தப்பிச் செல்ல வாகன சாரதியை சிறைப் பிடித்த ராணுவத்தினர் அவருடைய முகத்தில் கடுமையாகத் தாக்கியதோடு முதுகுப் பக்கத்தில் ராணுவ துப்பாக்கியால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சத்தத்தை கேட்ட மக்கள் குறித்த பகுதியில் ஒன்றுகூடி அந்த இடத்தில் இராணுவத்தினர் பொலிஸார் ஆகியோரை அழைத்த போது , தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர்களை அந்த இடத்துக்கு கொண்டு வருமாறு கூறி மக்கள் தொடர்ச்சியாக அந்த இடத்தில் நின்று போராட்டம் நடாத்தினார்கள்.

மக்கள் போராட்டம் நடத்திய போதிலும், அவர்களை அந்த இடத்துக்கு ராணுவத்தினர் கொண்டு வர மறுத்ததோடு பொலிசாரும் அவர்களை கைது செய்ய மறுத்திருந்தனர் இந்நிலையில் காயமடைந்தவர் 1990 அவசர நோயாளர் காவு வண்டி ஊடாக மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த இடத்தில் தாக்குதல் நடத்திய இராணுவத்தினரை கைது செய்யுமாறு கோரிய போதும் பொலிசார் கைது செய்யாத நிலையில் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலைய வாசலில் வந்து இராணுவத்தை கைது செய்யும் வரை அந்த இடத்திலிருந்து அகல மாட்டோம் எனக்கூறி உட்காா்ந்து போராட்டம் நடத்தினா். அதன் போதிலும் போலீசார் இராணுவத்தினரை கைது செய்ய முடியாது என கூறி அங்கிருந்து மக்களை விரட்டினார்கள்.

 


Recommended For You

About the Author: ஈழவன்