சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் மரணம்.

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் (வயது-67) நேற்றிரவு மாரடைப்பினால் காலமானார்.

புதுடெல்லியில் நேற்று மாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும், நேற்றிரவு 10.15 மணியளவில் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு சுஷ்மா சுவராஜ் இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த போது, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதையடுத்து, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் அவர் ஒதுங்கினார்


Recommended For You

About the Author: ஈழவன்