இலங்கையில் பலருக்கு ரேபிஸ் நோய்த் தொற்று..

இலங்கையில் சில பகுதிகளில் ரேபீஸ் என்ற நோய் தொற்றுக்குள்ளான 5 நரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மில்லனிய, ஹொரன, இங்கிரிய மற்றும் மதுராவல ஆகிய பிரதேசங்களில் இந்த நரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நரிகளின் தாக்குதலினால் பலர் ரேபிஸ் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக பராமரிப்பற்ற நாய்கள் கடித்தாலே இந்த ரேபிஸ் நோய் பரவும். எனினும் கடந்த சில நாட்களாக நரிகளினால் தாக்கப்பட்ட பலர் இந்த நோய் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், காலி – உடுகம சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு சொந்தமான மாபலகம மற்றும் யட்டலமத்த பிரதேசங்களில் ரேபிஸ் தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


Recommended For You

About the Author: Editor