பொலிஸார் மீது தாக்குதல்!

வடமராட்சி – பருத்தித்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சமரசம் செய்ய முற்பட்ட பொலிஸார் இருவர் மீதும் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருத்தித்துறை புனிதநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் (3) பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு தரப்பும் கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன், தடிகளுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில் மோதல் நகர்ந்து பருத்தித்துறை நகர் வரை சென்றிருக்கின்றது.

அங்கு மோதலில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸார் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் பருதித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன


Recommended For You

About the Author: Editor