குட்டி தேவதையுடன் ஆல்யா!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ’ராஜா ராணி’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஆல்யா மானசா அதே தொடரின் நாயகன் சஞ்சீவ் கார்த்திக்கை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த நட்சத்திர தம்பதிக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே.

கடந்த சில வாரங்களாக குழந்தையுடன் கூடிய ஆல்யாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் முதல்முறையாக குழந்தையுடன் புரபொசனல் போட்டோஷூட் ஒன்றை ஆல்யா எடுத்துள்ளார்.

ஆல்யா மற்றும் அவரது குட்டி தேவதையான குழந்தை ஆகிய இருவரும் பிங்க் நிற உடையில் இருக்கும் இந்த முதல் போட்டோஷுட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


Recommended For You

About the Author: Editor