பிரான்ஸ் உறையவைத்த நான்கு குழந்தைகளின் படுகொலை?நடந்தது என்ன?

பிரான்ஸ் வாழ் தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் உறையவைத்த நான்கு குழந்தைகளின் படுகொலை?நடந்தது என்ன? இதோ முழுமையான விபரங்கள்….

📷பிரான்சில் சனிக்கிழமை 03/10/2020 ஒரே குடும்ப வன்முறை காரணமாக. இலங்கையர்கள் நான்கு சிறுவர் ஒரு பெண் என 5 பேர் பலி. மேலும் ஐவர் படு காயம்..!!!

📷இலங்கை யாழ்ப்பானம் சண்டிலிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த அண்ணன் தங்கை என இரு குடும்பமே இந்த தாக்குதலால் பாதிப்படைந்துள்ளது.

📷பிரான்சில் Noisy-le-Sec என்ற நகரில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் சாவடைந்துள்ளனர்.

Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் பயங்கரமான இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

📷இந்த வீதியில் அமைந்துள்ள மதுச்சாலை ஒன்றுக்கு படுகாயமடைந்த நிலையில் வந்த தமிழ் குழந்தை ஒருவர் அங்கிருந்தவர்களிடம் உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளான்.

📷“எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வெட்டியும் அடித்தும் கொலை செய்துவிட்டார்!..” பலர் உயிருக்காக போராடுகின்றனர் என குறித்த குழந்தை மதுச்சாலையின் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளான்.

📷நிர்வாகியும் காவல்துறைக்கு அறிவிக்க சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவம் நடந்தவீட்டை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். சில காவல்துறையினர் மிரண்டுபோய் காணப்பட்டனர்..

📷வீடு முழுவதும் இரத்தம் தெறித்து இருக்க கத்தியால் வெட்டியும் சுத்தியலால் அடித்தும் பயங்கரமாக கொலை செய்யப்பட்ட ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டனர்.

📷நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் என ஐவர் இறந்த நிலையிலும்
1 ஒரு கைக்குழந்தை
2 ஒரு 4 வயது குழந்தை
3 ஒரு 13 வயது சிறுவர்
4 ஒரு 13 வயது சிறுவர்
5 வயதான ஒரு பெண் ( தாக்குதல் நடத்தியவரின் மனைவி)
மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் நினைவற்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர்.

📷அவர்கள் துரிதமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

📷வெள்ளிக்கிழமை இருகுடும்பமும் காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்று கைக்குழந்தையை இந்து முறைப்படி வித்து வாக்கும் வழிபாட்டால் ஈடுபட்டு இரு குடும்பங்களும் ( அண்ணன் தங்கை) மிக மகிழ்ச்சியாக ஒரு பிரச்சனையும் இன்றி இருந்ததாக கூறப்படுகிது.

📷நபர் தன் மனைவியையும் இரு பிள்ளைகளையும் சுத்தியால் அடித்து கொண்றுவிட்டு தனது தங்கையையும் அவரது கணவரையும் அவசரமாக வைத்தியசாலை செல்லவேண்டும் வாருங்கள் என தொலைபேசியில் கூப்பிட தங்கையும் தனது நான்கு பிள்ளைகளுடன் கணரையும் கூட்டிக்கொண்டு வர அவர்கள் மீதும் கொடூரமாக தாக்கி இரு குழந்தைகளை கொலை செய்தும் தங்கையையும் கணவரையும் குற்றுயிராக வும் தாக்க மற்ற இரு குழந்தைகளும் தப்பி வெளியே ஓடி உள்ளனர்.

📷‘இப்படி ஒரு குடும்ப பயங்கரத்தை இதுவரை பிரான்சில் பார்க்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். “சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது!” என காவல்துறை அதிகாரி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

📷தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர் தன்னை தானே தாக்கியதில் சம்பவ இடத்தில் நினைவை இழந்து ‘கோமா’ நிலையில் இருந்ததாகவும், அவரும் மருத்துவமனைக்கு அனப்பப்பட்டதாகவும் கூறினர். சம்பவத்தை பார்க்கும் போது குறிப்பிட்ட ஒரு நபரால் நடத்தப்பட்டதாக நம்பமுடியவில்லை என்றும், விசாரனை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர்

📷தாக்குதல் நடத்தியதாக படுகாயமடைந்த சிறுவனால் குற்றம் சாட்டப்பட்ட அவரின் மாமனார் கோமாவில் இருந்து மீண்டால் மட்டுமே 100% உண்மையான தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.

📷இக்குடும்பங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இதுவரை ஒரு சிறிய தகராறையோ சத்தத்தையோ தாம் கண்டதில்லை எனவும் மிகச்சிறப்பாக வாழ்ந்துவந்ததாகவும் அருகில் வசிப்பவர்களும் கடைக்காரர்களும் கூறிஉள்ளனர்…

நன்றி- உலகத் தமிழ் மங்கையர் மலர்

Image may contain: 3 people, people standing


Recommended For You

About the Author: Editor