கொரோனா – மத்திய கிழக்கு நாடுகளில் 63 இலங்கையர்கள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையர்கள் 63 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் நூற்றுக்கு 50 வீதமான மரணங்கள் சவூதி அரேபியாவில் பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் பிரதி முகாமையாளரும் ஊடக செய்தித் தொடர்பாளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

வேலை நிமித்தமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்