நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன்

இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளதுது.

அங்கு இந்த வைரஸ் தொற்றால் 75 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 2 இலட்சத்தை கடந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலும் இடம்பெறவுள்ளது. எனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கு மத்தியில் ட்ரம்பின் ஆலோசகர் ஹோம் ஹிக்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதது. இதனையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட ட்ரம்ப், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

அதில், ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க இராணுவ வைத்தியசாலையில் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டார்.

டிரம்பின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ட்ரம்ப் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார். எனினும் அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் டிரம்ப், நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் என ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன். என்னைத் திரும்பப் பெற நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். நான் திரும்பி வர வேண்டும், ஏனென்றால் நாங்கள் இன்னும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்