யாழில் காந்தியின் பிறந்த தினம்

மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் (02) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாவை சோ.சேனாதிராசா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள், மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காந்திய வழியை பின்பற்றியதாக மாணவி ஒருவருரை கௌரவித்து துணைதூதுவரால் பாரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.


Recommended For You

About the Author: Editor