போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரியாஜ் விடுதலை

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐந்து மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரியாஜ்க்கு தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பு உள்ளமை கண்டறியப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தமையும், 2019கு முன்னர் ஷஹ்ரானை தப்பிக்க ரியாஜ்சே உதவினார் என்று உளவுத்துறை பணிப்பாளர் ஒருவர் சாட்சியமளித்தமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor