விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் ஜோடியாக ராஷ்மிகா!

விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவர் நடிப்பதாக தகவல் பரவியது. அதை அவர் அப்போது மறுத்தார்.

“விஜய் மற்றும் அட்லியின் அடுத்த படத்தில் நான் இருக்கிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறீர்கள். இந்த முறை அது நடக்கவில்லை. ஆனால், விரைவில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


Recommended For You

About the Author: Editor