MT New Diamond கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கு அனுமதி

MT New Diamond கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

கடற்படை ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணம் மற்றும் நட்டஈடு வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கப்பலை அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்