கமின் கம’ – இரண்டாவது கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்டார் ஜனாதிபதி!

‘கமின் கம’  என்ற செயற்றிட்டத்தின் ஊடாக ஜனாதிபதி, ஒவ்வொரு பிரதேசத்துக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்டு அம்மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வினை வழங்கி வருகின்றார்.

அந்தவகையில் ‘கமின் கம’  செயற்றிட்டத்தின் இரண்டாவது பயணத்தினை மாத்தளை- ஹிபிலியாகட பகுதியில் ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொண்டிருந்தார்.

அதாவது, ஜனாதிபதி இன்று காலை, ஹிபிலியாகட – நாகவனராமய கோயிலுக்கு விஜயம் செய்து, பிரதேச மக்களுடன்  சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இதன்போது அப்பகுதி மக்கள், தாங்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தினர்.

இவ்வாறு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துக்கொண்ட ஜனாதிபதி, தன்னால் முடிந்தளவில் விரைவாக தீர்வினை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor