500 கிலோ எடையுள்ள இராட்சத குண்டு கடற்கரையில் மீட்பு..!

500 கிலோ எடைகொண்ட இராட்சத வெடி குண்டு ஒன்று கடற்கரை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்சின் தென்மேற்கு மாவட்டமான Landes இல் உள்ள Messanges கடற்கரையில் (plage de Messanges) இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த குறித்த வெடிகுண்டு எனவும், இத்துடன் சேர்ந்து ஒன்பது anti-tank mines ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பது anti-tank mines குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த இராட்சத குண்டு செயலிழக்கச் செய்யப்படும் வரை கடற்கரை மூடப்பட்டிருக்கப்படும் எனவும், கடற்கரையில் வேறு எங்கேனும் குண்டுகள் புதைந்துள்ளதா என கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor