‘பிங்க்’ நிறந்தில் ஈஃபிள் கோபுரம்..!

நேற்று இரவு ஒக்டோபர் 1 ஆம் திகதி இரவு ஈஃபிள் கோபுரம் ‘பிங்க்’ நிறத்தில் ஜொலிஜொலித்தது.
‘மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு’வுக்காக ஈஃபிள் கோபுரம் பிங்க் நிறந்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருடமும்  போல இவ்வருடத்தின் ஒக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.
நள்ளிரவின் பின்னர் 1 மணி வரை ஈஃபிள் கோபுரம் இந்நிறத்தில் ஒளிரும் எனவும், ஒவ்வொரு ஒருமணிநேரத்துக்கும் ஒரு தடவை விட்டுவிட்டு ஒளிரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று பரிஸ் mairie paris centre கட்டிடமும் பிங்க் நிறத்தில் ஒளிரவிடப்பட்டது.

Recommended For You

About the Author: Editor