கையெறி குண்டு கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்திய இராணுவத்திற்கு சுமார் 10 இலட்சம் கையெறி குண்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதத்தில் சுமார் 409 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நாக்பூரை சேர்ந்த எக்னாமிக் எக்பிளொசிவ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

தற்காப்பு மற்றும் தாக்குதல் என பலவித பயன்பாட்டுக்கு ஏற்ற விதமாக கையெறி குண்டுகள் தயாரிக்கப்படுவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor