10 இலட்சம் பெறுமதியான முதிரைக்குற்றிகளுடன் ஒருவர் கைது

வவுனியா- ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரைமரக்குற்றிகளை புளியங்குளம் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர்.

பாலமோட்டை பகுதியில் முதிரைமரங்கள் கடத்தப்படவுள்ளதாக விசேட அதிரடிபடையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர், லொறி ஒன்றை வழி மறித்து சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, உமி மூடைகளால் மறைத்துவைக்கப்பட்டு கடத்திசெல்லப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 23முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,அவற்றை கடத்திச்செல்லப் பயன்பட்ட வாகனத்தையும் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர்.

குறித்த மரக்குற்றிகள் யாழ்.நோக்கி கடத்தி செல்லப்படவிருந்ததாக தெரிவித்த விசேட அதிரடிப்படையினர், கைப்பற்றபட்ட முதிரைக்குற்றிகளையும், கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்