எங்களை இந்தியா தான் பாதுகாக்க வேண்டும்!

எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சிலி செலுத்தும் நிகழ்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாங்கள் எங்களை உங்களிடம் ஒப்படைத்து காத்திருக்கின்றோம்.

மறைந்த பாடகர் தமிழ் மக்களினுடைய உணர்வுகளோடு பயணித்த ஒருவர் அதற்காக பல பாடல்களை எங்கள் இனம் சார்ந்து எங்கள் தேசம் சார்ந்து பாடி இருக்கின்றார்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கும் இப்போதுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் இலங்கையில் நடைபெறப்போகும் பல காரியங்களும் எங்களை தாண்டி ஏதோ செய்யப் போகின்றது என்ற அச்சமும் எங்களிடம் இருக்கின்றது.

எனவே எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்