இலங்கையர்களுக்கு மற்றுமொரு ஆபத்து!

இலங்கையில் எலிக் காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைக் காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர தெரிவித்தார்.

அத்துடன், இதுவரை 6096 பேருக்கு இதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானோர் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவடடத்தில் மட்டும் இதுவரை 1341 பேருக்கு இந்த அறிகுறிகள் ஏறு;பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இதுவரை இந்த நோயின் அறிகுறிகள் இருந்த 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், அநுராதபுரம், கேகாலை, களுத்துறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor