புதிய கட்டுப்பாடுகளுக்கு தயார் ஆகிறது பரிஸ்!

புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களைச் சந்திக்க பரிஸ் மாநகரம் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் சற்று முன்னர் அறிவித்தார்.

வாராந்த சுகாதார நிலமைகளை வெளியிடுவதற்காக இன்று ஊடகத்தினருக்கு அறிக்கை சமர்ப்பித்த சுகாதார அமைச்சர் Olivier Véran சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

அதன்படி, பரிஸ் மற்றும் அதன் புறநகர்கள் தீவிர கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதுடன், மிக வேகமாக பரவி வரும் நகரமாகவும் உள்ளது.

இதனை கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்த Olivier Véran, இந்த கட்டுப்பாடுகள் தொடர்பான் விரிவான தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் எனவும், அந்த கட்டுப்பாடுகள் மறுநாள் திங்கட்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய கட்டுப்பாட்டுக்குள், மதுச்சாலைகள் முற்றாக மூடப்படுவதற்கும், திருமண நிகழ்வுகள், தனியார் விருந்துபசாரங்கள் முற்றாக இரத்துச் செய்யப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அறிய முடிகிறது.


Recommended For You

About the Author: Editor