செவ்வாய்க் கிரக நிலத்திற்கு கீழ் மூன்று ஏரிகள் கண்டுபிடிப்பு

செவ்வாய்க் கிரகத்தில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஏரிகளில் உள்ள தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால், அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றிவருகிறது ஐரோப்பிய விண்வெளி மையத்திற்கு சொந்தமான மார்ஸ் எக்ஸ்பிரஸ்.

அந்த ஆய்வுக்கலத்தின் ரேடரின் தரவுகளைக் கொண்டு, செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தின் நிலப்பரப்புக்கு 1.5 கிலோமீட்டர் கீழே சுமார் 20 கிலோமீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.அந்தவகையில், தற்போது மீண்டும் 3 ஏரிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor