அதிகரித்து வரும் வாகனங்களின் விலை

இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

வாகனங்கள் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்ற நிலையில் வாகனங்களின் விலைகள் குறித்து எழுந்துவரும் சந்தேகம் தொடர்பாக அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர், எந்த காரணத்திற்காகவும் உள்நாட்டில் தற்சமயம் வாகனத் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளுக்கு உள்நாட்டுப் பணம் மற்றும் அந்நிய செலாவணி என்பன கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்


Recommended For You

About the Author: Editor