வீதியை புனரமைக்க கோரி போராட்டம்!

பதுளை – பசறை, மடுல்சீமை, மகாதோவை தோட்ட கீழ் பிரிவு மக்கள், பாதையை புனரமைத்து தரும்படி கோரி இன்று (01) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மடுல்சீமை வீதியின் 89. கெரண்டி எல்ல பிரிவு மகாதோவை தோட்ட கீழ் பிரிவில் இருந்து யப்பாமை ஊடாக லுணுகலை நோக்கி செல்லும் சுமார் 7 கிலோ மீற்றர் வரையான பாதை நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையிலேயே தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பாதையை உடன் சீர் செய்து தருமாறும் கோரி அம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பாடசாலை சீருடையுடன் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.


Recommended For You

About the Author: Editor