ராகுல், பிரியங்கா கைது! – காரணம் இது தான்

இந்தியா – உத்தரா பிரதேசில் கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யமுனய அதிவேக வீதியில் வைத்து ராகுல் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்திய உத்தரா பிரதேச பொலிஸார் அவர் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர்.

இன்படி ராகுலுடன், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா மற்றும் காங்கிரஸின் ஏனைய தலைவர்களான அதிர் ராஜன், வேணுகோபால், ரந்தீப் சூரியவாலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

“பொலிஸார் என்னை தாக்கினர். தள்ளி வீழ்த்தினர்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் (29) கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 19 வயது யுவதி காயங்களுடன் டெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் யுவதியின் உடலை இரவோடு இரவாக அவரது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி பொலிஸார் எரித்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையிலேயே குடும்பத்தினரை சந்திக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைதாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதேவேளை “தடயவியல் அறிக்கையின்படி குறித்த யுவதி பாலியல்வன்கொடுமை செய்யப்படவில்லை; பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்; சிலர் இந்த விவகாரத்தை சாதி ரீதியில் திசை திருப்புகின்றனர்” என் – உ.பி. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor