சிறுவர் தின நிகழ்வும் மலர் வெளியீடும்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் வண்ணாத்துப் பூச்சிகள் மலர் வெளியீடும் வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வாழைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன், வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை அலகு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.சிவகரன், பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி.எம்.எம்.காசீம், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, வாழைச்சேனை சமுர்த்தி திட்ட முகாமையாளர் ந.விஜிதன், செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் கழகங்கள், சிறுவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வண்ணாத்துப் பூச்சிகள் மலரின் முதல் பிரதி உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தனுக்கு பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி.எம்.எம்.காசீமால் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஏனைய பிரதிகள் கலந்து கொண்ட அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களினால் சமூக வலைத்தளங்கள் மாணவர்களுக்கு பாதகமா அல்லது சாதமாக என்ற தொனிப் பொருளில் பட்டிமன்றம் இடம்பெற்றதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றது.

இதன்போது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் கழகம் மற்றும் கிராமிய சிறுவர் அபிவிருக்குழு என்பவற்றின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலை நிகழ்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. (150)


Recommended For You

About the Author: Editor