தனுஷ், சிம்பு திரைப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார் !

தனுஷ் நடிப்பில் உருவாகிய திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளரான கிருஷ்ணகாந்த் தனது 52 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களைத் இவர் தயாரித்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமாகியுள்ளதாக கூறப்படுகிறது அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor