மண்டைதீவு மகா வித்தியாலயம் புதுப்பொழிவு பெற்றது

யாழ்.மண்டைதீவு மகா வித்தியாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப் புனரமைப்புப் பணிக்கான நிதியுதவியினை அப் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலம்பெயர் உறவுகளினால் மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அதனூடாக சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் முதல்கட்டமாக அதிபர் அலுவலகம் மற்றும் ஆரம்பப் பிரிவுக் கட்டடத் தொகுதி ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று இன்றைய தினம் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் சி.ஞானசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான கணனிகள் கையளிப்பு நிகழ்வுகளும் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor