இறுதிகட்டத்தில் பிகில்!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பிகில் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் பிகில் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
மெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் நடித்த விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
கால்பந்து பயிற்சியாளராக விஜய் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா மருத்துவ மாணவியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் தற்போது படக்குழு எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இறுதிகட்டப் படப்பிடிப்பை நடத்திவருகிறது.
இதில் விஜய், நயன்தாரா இடையிலான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பிகில் படக்குழுவினருக்கு பெரும் தலைவலியை கொடுத்துவந்தன. தற்போது அரங்கிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களும் பரவிவருகின்றன.
https://www.tamilarul.net/
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் விஜய் பைக் ஓட்டிச் செல்லும் காட்சி சில தினங்களுக்கு முன் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது பரவிவருகின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான சிங்கப்பெண்ணே பாடல் ஹிட்டடித்துள்ள நிலையில், விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம்’ பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ரெபா மோனிகா ஜான், இந்துஜா, யோகிபாபு, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு மேல் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளன.

Recommended For You

About the Author: Editor