வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

வடமராட்சி கிழக்கு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

தம்பகாமம் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலம் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடு, பாகங்கள் சிதைந்து ஆங்காங்கே காணப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் சாரம் உள்ளிட்ட சில தடயப் பொருட்களும் காணப்பட்டன.

அந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயுள் நிலையில், சடலம் மீட்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலத்தை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.


Recommended For You

About the Author: Editor