அதிகாலையில் வீடுகளிற்கு திடீரென புகுந்த சிறிலங்கா இராணுவம்

யாழ்.அராலி மேற்கு ஜே -160 கிராமசேவகர் பிரிவில் இன்று அதிகாலை இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றினை நடாத்தியிருக்கின்றனர்.

சுற்றிவளைப்புக்கான காரணம் தொடர்பாக எதுவும் கூறப்படாத நிலையில், வீடு வீடாக நுழைந்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குறித்த பகுதி மக்கள் சிலர் கூறுகையில், காலையில் வழக்கமான செயற்பாடுகளை ஆரம்பித்தபோது பெருமளவு இராணுவத்தினர் சுற்றிவளைப்பில்  ஈடுபட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது.

பின்னர் அவர்கள் எமது பிரதேசத்திலுள்ள சகல வீடுகளையும் சல்லடையிட்டு தேடுதல் நடாத்தியிருந்தார்கள்.

குறிப்பாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மக்களுடைய வீடுகளுக்குள் சப்பாத்து கால்களுடன் நுழைந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.

எனினும் குறித்த சோதனை நடவடிக்கை வன்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை தேடியதாவோ, சட்டவிரோத பொருட்கள் தொடர்பானதாகவோ இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor